உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிரபல மிருதங்க வித்வான் சாதனை யூடியூப் தளத்தில் 1,500 பாடல்கள்

பிரபல மிருதங்க வித்வான் சாதனை யூடியூப் தளத்தில் 1,500 பாடல்கள்

பாலக்காடு, : கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்த பிரபல மிருதங்க வித்வான், 1,500 பாடல்களை தயாரித்து 'யூ டியூப்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், குழல்மந்தம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். பிரபல மிருதங்க வித்வானான இவர், மிருதங்கத்தில் சாதனைகள் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர்.இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில், 'சுலளிதம்' என்ற பெயரில், தினமும் ஒரு பாடல் தயாரித்து 'யூ டியூப்' பகத்தில் வெளியிட்டு வந்தார். 2020 ஏப்., 19ல் துவங்கி, தற்போது, 1,500 பாடல்கள் தயாரித்து பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து, ராமகிருஷ்ணன் கூறியதாவது:'சென்ட்ரல் பார் மியூசிக் அண்ட் ஆர்ட்ஸ்' என்ற பெயரில், 'யூ டியூப்' சேனல் வாயிலாக நிகழ்ச்சியை துவங்கினேன். 'காயம்பூ' என்ற 1,500-வது பாடலுக்கு பிரபல இசை அமைப்பாளர் ரமேஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அந்த பாடலை அவரது மகள் மதுஸ்ரீ பாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியை, 'காயம்பூ 2024' என்ற பெயரில் கொண்டாட உள்ளோம். அதன் ஒரு பகுதியாக, 'ஆன்லைன்' வாயிலாக, ஒரு வாரத்துக்கு, பாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்னேன்.பிரபல இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பாடியுள்ளனர். இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியில் பாடி உள்ளார்.இசையமைப்பாளர் கைதப்பிரம் தாமோதரன் நம்பூதிரி இசை அமைத்த பாடல்களும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை