உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் 19வது ரோஜா கண்காட்சி நிறைவு

ஊட்டியில் 19வது ரோஜா கண்காட்சி நிறைவு

ஊட்டி;ஊட்டி ரோஜா பூங்காவில் நடந்த, 19வது கண்காட்சியில் நிறைவு பெற்றது.நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள ரோஜா பூங்காவில், 19வது ரோஜா கண்காட்சி கடந்த, 10ம் தேதி துவங்கியது. இதன் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி வரவேற்று பேசினார். விழாவில், மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து, சிறந்த தோட்டங்கள் மற்றும் விழாவில் அரங்குகள் அமைத்தவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.விழாவில், 'சுழற்கோப்பைகள், 12; முதல் பரிசு, 29; இரண்டாம் பரிசு, 25; சிறப்பு பரிசு, 14,' என, மொத்தம், 80 பரிசுகோப்பைகள் வழங்கப்பட்டன. அதில், 'பெஸ்ட் புளூம் ஆப்தி ேஷா' கோப்பை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று திரளான சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி