உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் சூறை காற்று 2000 வாழை மரங்கள் சேதம் ;விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம்

கூடலுாரில் சூறை காற்று 2000 வாழை மரங்கள் சேதம் ;விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம்

கூடலுார்:கூடலுார் பகுதியில், நடப்பாண்டில், ஜன., முதல் கோடை மழை ஏமாற்றி வந்தது. இதனால், ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கத்தால் வறட்சி அதிகரித்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் உடல் சார்ந்த பிரச்னைகளில் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மாலை மற்றும் இரவு நேரங்களில், கோடை மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்துள்ளது. பொதுமக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.நேற்று முன்தினம், இரவு, 10:00 மணிக்கு கோடை மழையுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில், பல பகுதிகளில் நேந்திரன் வாழை சாய்ந்தது.அதில், புளியம்பாறை பகுதியில் ஏற்பட்ட சூறைக்காற்றில், மோகன், ராஜகோபால் உள்ளிட்ட 10 விவசாயிகள் பயிரிட்டிருந்த, 2000 வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தது. நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமலும், கூட்டுறவு வங்கி கடனையும் செலுத்த முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயி மோகன் கூறுகையில்,''நேந்திரன் வாழையை காட்டு யானையிடமிருந்து காப்பாற்றவும் போராடி வருகிறோம். நடப்பாண்டு வறட்சியிலும் சிரமப்பட்டு வருகிறோம். இந்நிலையில், அறுவடைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில், திடீரென வீசிய சூறைக்காற்றில் வாழை மரங்கள் சேதமடைந்ததால், நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.விவசாயத்துக்காக கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நஷ்டத்தை ஈடு செய்ய, அரசு உரிய இழப்பீடு வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி