| ADDED : ஏப் 22, 2024 01:36 AM
குன்னுார்;குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில், 12.85 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்பனையாகி, 12.63 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 15வது ஏலத்தில், '13.02 லட்சம் கிலோ இலை ரகம், 4.00 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 17.02 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது.அதில், '9.73 லட்சம் கிலோ இலை ரகம், 3.12 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என 12.85 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்றது. 12.63 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 98.21 ரூபாயாக இருந்தது. சராசரி விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.கடந்த ஏலத்தை விட இந்த ஏலத்தில், 12 ஆயிரம் கிலோ வரத்து அதிகரித்தது; எனினும், 4.16 லட்சம் கிலோ துாள் தேக்கமடைந்தது. 75.54 சதவீதம் தேயிலை துாள் விற்றது. 24.46 சதவீதம் தேக்கமடைந்ததுடன், ஒரே வாரத்தில் 2.12 கோடி ரூபாய் மொத்த வருமானம் சரிந்தது. மறுபுறம் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பசுந்தேயிலை மகசூல் பாதித்து தேயிலை உற்பத்தியும் குறைய வாய்ப்புள்ளது.