உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பணம் கேட்டு மிரட்டல் கவுன்சிலர் மீது வழக்கு பதிவு

பணம் கேட்டு மிரட்டல் கவுன்சிலர் மீது வழக்கு பதிவு

குன்னுார்;பணம் கேட்டு மிரட்டிய, கேத்தி பேரூராட்சி, 7வது வார்டு கவுன்சிலர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கூடலுார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கேத்தி உல்லாடா அருகே காட்டேஜ் கட்டி நடத்தி வருகிறார். 'கட்டுமான பணியில் இருந்து தொடர்ந்து பல முறை இப்பகுதி கவுன்சிலர் நித்யா, அவரது கணவர் ராஜேஷ் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டினர்,' என, சுரேஷ் கேத்தி போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சிவசங்கரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.போலீசார் கூறுகையில், 'காட்டேஜ் கட்டுமான பணியில் இருந்து தற்போது வரை, கவுன்சிலர் நித்யா மற்றும் அவரது கணவர் ராஜேஷ் ஆகியோர் சுரேஷின் காட்டேஜ்க்கு சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அதில், கோவிலுக்கு எனக் கூறி ஏற்கனவே பணம் பெற்றுள்ளனர். தற்போது மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில், இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை