உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடைப்பாதையில் விழுந்த மரம் நடந்து செல்வதில் சிக்கல்

நடைப்பாதையில் விழுந்த மரம் நடந்து செல்வதில் சிக்கல்

ஊட்டி:ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே, ஸ்பென்சர் சாலையில், விழுந்த மரம் முழுமையாக அகற்றப்படாததால் நடைபாதையில் நடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நீலகிரியில் பெய்து வரும் கனமழையில், ஆங்காங்கு மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. அரசு துறை ஊழியர்கள் உடனுக்குடன், மரங்களை அறுத்து வருகின்றனர்.இந்நிலையில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே, ஸ்பென்சர் சாலையில் கடந்த, மூன்று நாட்களுக்கு முன்பு மரம் விழுந்தது. ஊழியர்கள் உடனடியாக மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவில்லை.இருப்பினும், நடைபாதையில் மரம் அறுக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. மின் கம்பிகளும் தொங்கி கிடக்கிறது. இதனால், மக்கள் நடந்துச்செல்ல முடியாமல், சாலையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, அலுவலக தேவைகளுக்காக வரும் பொதுமக்கள் நடந்துச்செல்ல எதுவாக, மரத்தை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை