உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சரிவான பகுதியில் உயரமான தடுப்பு சுவர்

சரிவான பகுதியில் உயரமான தடுப்பு சுவர்

ஊட்டி;ஊட்டி அருகே காந்தி பேட்டையில், 200 அடி உயரத்துக்கு தடுப்புசுவர் கட்டப்பட்டு வருகிறது.ஊட்டிக்கு சீசன் சமயத்தில் சராசரியாக, 20 ஆயிரம் வாகனங்கள் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண முடியாமல் அதிருப்தியுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், குன்னுார் அருகே காட்டேரியிலிருந்து கோடேரி, கெந்தளா, கொல்லிமலை ஓர நள்ளி, காந்தி பேட்டை வழியாக ஊட்டிக்கு வர நெடுஞ்சாலை துறை சார்பில், 50 கோடி ரூபாயில் புறநகர் சாலை பணிகள் நடந்து வருகிறது. நடப்பாண்டு டிச.,க் குள் முடிக்கும் வகையில் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. போக்குவரத்துக்கு தீர்வு காணும் வகையில் நடந்த வரும் சாலை பணியை வாகன ஓட்டிகள் உட்பட பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.இந்நிலையில், ஊட்டி-மஞ்சூர் பிரதான சாலையில் காந்திபேட்டையில் ஒரு குறுகிய வளைவில், 200 அடி உயரம், 400 மீ., துாரத்திற்கு கான்கிரீட் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. சரிவான பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுனர்கள் கூறுகையில், 'நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் பணியை ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு தன்மை குறித்து உறுதிப்படுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை