உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குப்பை சிதறாமல் கொண்டு செல்ல வலை அவசியம்

குப்பை சிதறாமல் கொண்டு செல்ல வலை அவசியம்

ஊட்டி:'ஊட்டி நகரில் குப்பைகளை சேகரித்து லாரிகளில் எடுத்து செல்லும்போது வலையை போர்த்தி எடுத்து செல்ல வேண்டும்,' என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 1.30 லட்சம் பேர் வசிக்கின்றனர். துாய்மை பணியாளர் மூலம் வார்டுகளிலிருந்து மட்கும் குப்பை, மட்காத குப்பை தரம் பிரித்து வாங்கப்படுகிறது. தினமும் சராசரியாக, 25 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பைகளை லாரிகள் மூலம் தீட்டுக்கல் பகுதிக்கு கொண்டு செல்கின்றனர். வார்டுகளில் குப்பைகளை சேகரித்து நகர் வழியாக செல்லும் நகராட்சி வாகனங்களில் இருந்து, சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மீது குப்பை சிதறாமல் இருக்க வலை போர்த்தி கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில், சமீப காலமாக பல குப்பை வாகனங்களில் வலைகள் போர்த்தாமல், திறந்தவெளியில் குப்பைகளை கொண்டு செல்வதால், அவை சாலையில் சிதறி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைகின்றனர்.மக்கள் கூறுகையில், 'ஊட்டி மார்க்கெட் பகுதியில் இருந்து செல்லும் பல வாகனங்களில் வலை காணப்படுவதில்லை. இதற்கான வலையை நகராட்சி நிர்வாகம் கொடுப்பதை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், துாய்மை பணியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நகராட்சி சுகாதார பிரிவினர் ஆய்வு மேற்கொண்டு குப்பை வாகனங்களில் வலையை போர்த்திக் கொண்டு எடுத்து செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை