உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தமிழக - கேரள எல்லையில் அதிரடிப்படை -- -நக்சல் துப்பாக்கி சண்டை

தமிழக - கேரள எல்லையில் அதிரடிப்படை -- -நக்சல் துப்பாக்கி சண்டை

பந்தலுார்:கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு நவ., மாதம், வயநாடு பேரியம் வனத்தை ஒட்டிய, பெரிய சப்பரம் என்ற இடத்தில் துப்பாக்கி சண்டை நடந்தது.அதில், நக்சல்கள் உண்ணி மாயா மற்றும் சந்துரு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதே நாளில் கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் நக்சல் அனீஸ் பாபு என்பவரை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து, தமிழக - கேரளா மாநில அதிரடிப்படை போலீசார், இரு மாநில எல்லை வனப்பகுதிகள், பழங்குடியின கிராமங்களில் தொடர் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 24ம் தேதி சோமன், மொய்தீன், மனோஜ், சந்தோஷ் ஆகிய நக்சல்கள், வயநாடு கம்பமலா தேயிலை தோட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்துள்ளனர். அங்கிருந்த தொழிலாளர்களிடம், 'தேர்தலில் வாக்களிக்க வேண்டாம்' என தெரிவித்து, வனப்பகுதிக்குள் சென்றனர்.அப்பகுதியில், கேரள மாநில தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று பகல், 11:00 மணிக்கு வனப்பகுதிக்குள் சென்ற தண்டர்போல்ட் போலீசார் மற்றும் நக்சல்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. 9- முறை துப்பாக்கி சூடு நடந்ததில் காயம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், 10 குழுக்களை சேர்ந்த அதிரடிப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார், வனத்துறையினர் வனப்பகுதிக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், தமிழக அதிரடிப்படை போலீசாரும் மாநில எல்லை வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம், தமிழகம் - கேரளா எல்லை பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ