மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி, : ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் நாராயண குருகுலத்தின் ஆண்டு விழா நடந்தது. கருணா சங்கரியின் பரத நாட்டியம் ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் நடராஜ குருவால் நிறுவப்பட்ட, நாராயண குருகுலத்தின், 101வது ஆண்டு விழா; நித்திய சைதன்யதியின்,100வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.சுவாமி தியகேஸ்வரன் தலைமை வகித்தார். சுவாமினி கீதா காயத்திரி முன்னிலையில், ஹோமம் கூட்டு பிரார்த்தனை நடத்த பட்டது.காஞ்சன் காடு ஆனந்த ஆஸ்ரமத்தின் சுவாமி முக்தானந்தா பேசுகையில், ''நித்ய சைதன்ய குருவின் எழுத்துக்களும், தத்துவங்களும் இளைஞர்களுக்கு பாடங்களாக அமைந்தது. அவர் எதை போதித்தரோ அதை தன் வாழ்நாளில் கடைப்பிடித்தார்,'' என்றார்.டாக்டர் சாமிரான் பேசுகையில், ''சக மனிதர்களிடம் எந்த வேற்றுமை பாகுபாடின்றி இணக்கமாக வாழ்வது மட்டுமல்ல, சகல ஜீவராசிகளின் மீது நேயம் கொண்டு வாழ்வது இன்றைய அவசியம். இதில், உலகின் எதிர்காலமும் அடங்கியுள்ளது . இதுவே, குருவின் சிந்தனையாக இருந்துள்ளது,'' என்றார். எழுத்தாளர் முஸ்தப்பா மவுலி பேசுகையில், ''எந்த திணிப்புகள் இல்லாத சுதந்திரமான சிந்தனைகள் எல்லோருக்குள்ளும் கொண்டு சென்றவர் குரு,'' என்றார்.நீலகிரி ஆவண காப்பகம் இயக்குனர் வேணுகோபால் தர்மலிங்கம் பேசுகையில்,''நீலகிரியை பாதுகாப்போம் இயக்கத்தின் துாண்டுகோலாக நித்திய குரு செயல்பட்டார். இயற்கையின் எந்த ஒரு இழப்பும், மனித சமூகத்திற்கு பேரிழப்பு ஏற்படும் என்று அவர் கூறிய கருத்துக்கள், தற்போதை சூழ்நிலைக்கு நினைவு கூறத்தக்கது,'' என்றார்.தொடர்ந்து, ஸ்ரீமதி ஜெயகலா சனல் குமாரியின் கர்நாடக இசை, கருணா சங்கரியின் பரத நாட்டியம் நிகழ்வுகள் இடம் பெற்றன. இதற்கான ஏற்பாடுகளை சுவாமி வியாசபிரசாத் செய்திருந்தார்.
03-Oct-2025