உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வேளாண் வளர்ச்சி திட்டங்கள் ஆலோசனைக் கூட்டம்

வேளாண் வளர்ச்சி திட்டங்கள் ஆலோசனைக் கூட்டம்

பெ.நா.பாளையம், : தமிழக அரசு சார்பில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.துடியலூரில் நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., அருண்குமார், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கடந்த, 21--22, 22 -23, 23--24 ஆகிய நிதி ஆண்டுகளில், தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, பசுந்தாள் உர விதைகள் விநியோகம், பனை மேம்பாட்டு திட்டம், விதை கிராம திட்டம், விவசாய பண்ணை கருவிகள் தொகுப்பு விநியோகம், இயற்கை வேளாண்மைஊக்குவிப்பு, பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்குதல், நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் ஆகியவை குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை