உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில எல்லையில் தொடரும் பறக்கும் படை சோதனை

மாநில எல்லையில் தொடரும் பறக்கும் படை சோதனை

கூடலுார்;தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையிலும், கூடலுார் ஒட்டிய மாநில எல்லைகளில் பறக்கும் படை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பண பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். ஆவணங்கள் இன்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில், தமிழகத்தில், 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. ஓட்டு பதிவு நிறைவு பெற்ற நிலையில், பறக்கும் படை சோதனை தொடருமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்தது.'தமிழகத்தை ஒட்டிய அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதால், மாநில எல்லைகளில் மட்டும் பறக்கும் படை சோதனை நடைபெறும்,' என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் தமிழகம் -கேரளா; தமிழகம்- கர்நாடகா எல்லையில் உள்ள சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை