உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை ஒழிப்பு ஊர்வலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

போதை ஒழிப்பு ஊர்வலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கூடலுார்;கூடலுாரில் நடந்த போதை ஒழிப்பு ஊர்வலத்தில் மாணவர்கள் பங்கேற்றனர்.கூடலுாரில் வருவாய் துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு ஊர்வலம் நடந்தது. நகராட்சி அலுவலகம் அருகே, துவங்கிய ஊர்வலத்துக்கு, ஆர்.டி.ஓ., செந்தில்குமார் தலைமை வகித்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் பழைய கோர்ட் சாலை வழியாக சென்று, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நிறைவு பெற்றது. அங்கு நடந்த நிகழ்ச்சியில் போதையினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.ஊர்வலத்தில், டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) யோகேஷ்வரி, இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது ஆகியேர் பங்கேற்றனர். முன்னதாக, அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை