உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தடகள விளையாட்டு பயிற்சி முகாம்

தடகள விளையாட்டு பயிற்சி முகாம்

பெ.நா.பாளையம் : கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தடகள விளையாட்டு முகாம் நேரு விளையாட்டு அரங்கம், கொடிசியா, பி.என்., புதூர் ஆகிய இடங்களில் கடந்த இரண்டு மாதங்களாக நடந்தன.விளையாட்டுப் போட்டிகள் மற்றும் முகாம் நிறைவு விழா பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில், 120 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு, கோவை அகாடமி அமைப்பின் செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். தலைவர் பரசுராமன் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ