உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதுமலையில் 8 இடங்களில் தானியங்கி கேமராக்கள் வன குற்றத்தை தடுக்க நடவடிக்கை

முதுமலையில் 8 இடங்களில் தானியங்கி கேமராக்கள் வன குற்றத்தை தடுக்க நடவடிக்கை

கூடலூர்;முதுமலை வன பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 8 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் வன குற்றங்களை தடுக்க வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், வன ஊழியர்கள் தங்கி கண்காணித்து வருகின்றனர். வன பாதுகாப்பு, வனவிலங்குகள் நடமாட்டம், வெளிநபர்கள் ஊடுருவலை தடுக்க வனப்பகுதியில், 8 இடங்களில், சோலார் மூலம் இயங்கக்கூடிய தானியங்கி கேமராக்களை பொருத்தியுள்ளனர். இதில், பதிவாகும் காட்சிகளை, தெப்பக்காடு கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கோடைகாலங்களில், வனத்தீயை கண்காணிப்பதிலும் இந்த கேமராக்கள் வனத்துறைக்கு உதவுகிறது. வனத்துறையினர் கூறுகையில், 'வன ஊழியர்கள் சுழற்சி முறையில், 24 மணி நேரமும் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தானியங்கி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வேட்டை மற்றும் வனக் குற்றங்களை தடுக்க உதவியாக உள்ளது.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை