உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோர புல்வெளியில் குட்டி துாக்கம் போட்ட யானைகள்

சாலையோர புல்வெளியில் குட்டி துாக்கம் போட்ட யானைகள்

பந்தலுார் : பந்தலுார் அருகே புல்வெளியில் குட்டி துாக்கம் போட்ட யானைகளை பயணிகள் ரசித்து சென்றனர்.பந்தலுார் அருகே சேரம்பாடி டான்டீ மற்றும் ஏலியாஸ் கடை பகுதிகளில், 20-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரத்தில் ஊருக்குள் வந்து முகாமிடும் யானைகள் பகல் நேரத்தில் அருகில் உள்ள புதர்கள் மற்றும் புல்வெளியில் ஓய்வெடுக்கின்றன. நேற்று பகல் ஒரு குட்டியுடன் மூன்று யானைகள் முகாமிட்டன.நீண்ட நேரம் நின்றிருந்த யானைகள், சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக புல்வெளியில் திடீரென துாக்கம் போட்டன. சில நிமிடங்களில் குட்டி மற்றும் இரண்டு யானைகளும் எழுந்து நின்றன. குட்டியானை பால் குடித்த பின்பு, மீண்டும் மூன்று யானைகள் உறங்கின. ஒரு தாய் யானை நின்று பாதுகாப்பில் ஈடுபட்டது. இந்த காட்சிகளை இந்த வழியாக சென்ற பயணிகள் பார்வையிட்டு 'போட்டோ' எடுத்து ரசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை