பந்தலுார் இளைஞர்கள் வயநாடுக்கு உதவிக்கரம்
பந்தலூர் : வயநாட்டில் பல உயிர்களை பலி கொண்ட துயர சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பந்தலூர் இளைஞர்கள் பொருளுதவி செய்துள்ளனர்.கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியில், ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.இதில், பந்தலூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு இடங்களில் உள்ள நண்பர்கள் வாயிலாக, அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வயநாடு பகுதியில் முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு வழங்குவதற்காக எடுத்து சென்றனர்.இளைஞர்களின் இந்த முயற்சிக்கு இப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.