உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடைப்பந்து ஊட்டி அணி வெற்றி

கூடைப்பந்து ஊட்டி அணி வெற்றி

கோத்தகிரி:கோத்தகிரி காந்தி மைதானத்தில், மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல அணிகள் பங்கேற்று விளையாடின. ஊட்டி ஜே.பி.சி., அணி மற்றும் கோத்தகிரி கூடைப்பந்து அணிகள், லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற நிலையில், இறுதி போட்டியில் விளையாடின.ஆட்டத்தின் தொடக்கம் முதலே, மிகவும் விறு,விறுப்பாக நடந்த இப்போட்டியில், ஊட்டி ஜே.பி.சி., அணி சிறப்பாக விளையாடி, 86:76 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில், முதல் இரண்டு இடங்களில் சாதித்த அணிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோத்தகிரி கூடைப்பந்து சங்கம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை