உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மகளிர் கல்லுாரிக்குள் கரடி அச்சமடைந்த மாணவியர்

மகளிர் கல்லுாரிக்குள் கரடி அச்சமடைந்த மாணவியர்

குன்னுார்:குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி வளாகத்தில் புகுந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரம் மட்டுமே வந்த கரடிகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருகின்றன.இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணி அளக்கு, குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி வளாகத்திற்குள் புகுந்த கரடி அங்கும் இங்கும் ஓடியது. அங்கிருந்த கல்லுாரி விடுதி மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் அச்சமடைந்தனர். காவலர் விரட்டியதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்த கரடி தடுப்பு வேலியை தாண்டி வனப் பகுதிக்குள் சென்றது. வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ