உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு பதிவு

தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு பதிவு

ஊட்டி : தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீலகிரி லோக்சபா தொகுதியில் எம்.பி., ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் எம்.பி., ராஜா ஊட்டி அடுத்த மஞ்சூர் பஜாரில் பொதுமக்களிடம் ஓட்டு கேட்க சென்றார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக தேர்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது. இதுகுறித்துதேர்தல் பறக்கும் படையினர் மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் மட்டக்கண்டி கிராமத்தை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் சதீஷ்குமார் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி