உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூட்டுறவு பணியாளர் நாள் நிகழ்ச்சி குறைகளுக்கு தீர்வு காண உறுதி

கூட்டுறவு பணியாளர் நாள் நிகழ்ச்சி குறைகளுக்கு தீர்வு காண உறுதி

ஊட்டி : ஊட்டி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், கூட்டுறவுத்துறை பணியாளர் நாள் நிகழ்ச்சி நடந்தது.நீலகிரி மாவட்டத்தில், கூட்டுறவு துறை இணை பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள, 140 கூட்டுறவு சங்கங்களில், பொது வினியோக திட்ட பணியாளர்கள், சங்கங்களில் தற்போது பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் பங்கேற்ற 'பணியாளர்கள் நாள்' நிகழ்ச்சி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்தது. இதில், 36 பணியாளர்கள், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்பட்ட குறைகள் அடங்கிய மனுக்களை, நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் தயாளன் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மது ஆகியோரிடம் வழங்கினர். 'இம்மனுக்களுக்கு, சட்ட விதிகள், அரசாணை மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பதிவாளரின் சுற்றறிக்கைகளின் படி, இரண்டு மாதத்திற்குள் தீர்வு காணப்படும்,' என, இணைப்பதிவாளர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், துணை பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) அமீர்ஹசன் முசாபர் இம்தியாஸ், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர் அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை