மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பாலக்காடு;கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு நெல்லிப்புழை என்ற இடத்தை சேர்ந்த ஆபிதினின் மகன் அன்சில், 18. இவர், கோவையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில், சக மாணவர்கள் 11 பேருடன் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, வாளையார் அணையை சுற்றி பார்க்க சென்றார்.அணைக்குள் குளிக்க இறங்கியபோது, அன்சில் தாழ்வான பகுதியில் சிக்கிக் கொண்டார். சக மாணவர்கள் முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. தகவல் அறிந்து வந்த ஊர் மக்களும் வாளையார் போலீசாரும், கஞ்சிக்கோடு தீயணைப்பு படையினரும் ஒருங்கிணைந்து இரவு முழுவதும் முயற்சித்தும் அன்சிலை மீட்க முடியவில்லை.இதையடுத்து, நேற்று காலை மீண்டும் நடத்திய தேடுதலில் அன்சிலின் உடலை மீட்டனர். தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
03-Oct-2025