மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சிகாக பல வண்ணங்களில் மலர் தொட்டிகளை அடுக்கி வைத்து அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 126வது மலர்கண்காட்சி வரும், 10ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணியளவில் பல வண்ண மலர் தொட்டிகளை மாடங்களில் அடுக்கி வைக்கும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.நடப்பாண்டு சிறப்பு அம்சமாக, 35 ஆயிரம் மலர் தொட்டிகளில், 'ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, டெய்சி, சைக்லமன் மற்றும் புதிய ரகமான ஆர்னமென்டேல்கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியா, இன் காமேரிகோல்ட், பிகோனியா, பேன்சி, பெட்டுனியா மற்றும் சூரியகாந்தி,' உள்ளிட்ட, 75 இனங்களில், 388 வகையான ரகங்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விருந்தாக அடுக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள, 6.5 லட்சம் மலர் நாற்றுகளும் மலர்ந்து அழகாக காட்சியளிக்கிறது. மலர் காட்சிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பூங்காவில, 10 ஆயிரம் வகையான வண்ண மலர் தொட்டியில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகிறது.இவை காண்போருக்கு குளிர்ச்சி தரும் வகையில் அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வாண்டு சிறப்பு அம்சமாக மலர்க்காட்சியில், 10ம் தேதி 'லேசர் லைட் ஷோ' நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
03-Oct-2025