உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி: அரசு பழங்குடி பள்ளிக்கு பரிசு தொகை அரசு பழங்குடி பள்ளிக்கு பரிசு தொகை

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி: அரசு பழங்குடி பள்ளிக்கு பரிசு தொகை அரசு பழங்குடி பள்ளிக்கு பரிசு தொகை

கூடலுார்: மாவட்ட அளவில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டியில், முதுமலை கார்குடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று, மாநில அளவில் விளையாட தேர்வு பெற்றனர்.நீலகிரி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்கள் இடையே முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டு போட்டிகள் ஊட்டியில் நடந்தது. அதில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கைப்பந்து இறுதி போட்டியில் முதுமலை கார்குடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் சிவசங்கரி, உடற்கல்வி ஆசிரியர் மோகிலா ஆகியோரை, பள்ளி தலைமை ஆசிரியர் முனுசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற எங்கள் பள்ளி மாணவர்களுக்கு, 36 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.மேலும், மாநில அளவில் நடைபெறும் கைப்பந்து போட்டியில், நீலகிரி மாவட்டம் சார்பில் விளையாட எங்கள் பள்ளியை சேர்ந்த, 4 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை