மேலும் செய்திகள்
அடுத்தடுத்து இறந்த கால்நடைகளால் அதிர்ச்சி
20 hour(s) ago
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
20 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
21 hour(s) ago
அன்னுார் : 'வணிக நோக்கத்திற்காக கண்டுபிடித்த வசதிகள் அனைத்தும், மனிதம் என்கிற பண்பை மாற்றி, இயந்திரத்தனமாய் இயங்கும் மனிதர்களாய் மாறிவிட்டனர்,' என, புலவர் ராமலிங்கம் பேசினார். அன்னுார் அருகே, கோவில்பாளையத்தில் கவையன்புத்தூர் தமிழ் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின், 61வது திங்கள் அமர்வு விழா, கோவில்பாளையம் இன்போ பொறியியல் கல்லூரியில் நடந்தது.பானுமதி வரவேற்றார். புலவர் ராமலிங்கம் தலைமை வகித்து பேசியதாவது: அறிவியல் வளர்ச்சியில் அதிவேகமான முன்னேற்றத்தின் காரணமாக, மனித வாழ்க்கை என்பது மின்னல் வேகத்தில் போய்க் கொண்டுள்ளது.வணிக நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட வசதிகள் அனைத்தும், மனிதம் என்கிற பண்பை மாற்றி, இயந்திரத்தனமாய் இயங்கும் மனிதர்களாய் மாறிவிட்டனர். இது வருத்தத்தை அளிக்கிறது. இந்த சூழலில் தமிழை பாரம்பரியத்தோடும், இனிமை மாறாமலும், வளர்க்க,வேண்டும். அதற்கு கூட்டங்கள், பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், தனி சொற்பொழிவுகள் ஆகியவற்றை நடத்த வேண்டும். அதில் மாணவ, மாணவியர் அதிகம் பங்கேற்க வேண்டும். இதனால் தன் தனி திறன்களை பயன்படுத்தி வந்தாலே, தமிழ் தானாய் வளரும். மொழி இல்லையேல், சமூகமே இல்லை. முதலில் மொழியை கற்போம், பயன்படுத்துவோம், படிப்போம், பண்பை வளர்ப்போம், பார் புகழும் மொழியென தமிழை உயர்த்துவோம். இவ்வாறு புலவர் பேசினார். புலவர்கள் காளியப்பன், முனியாண்டி, கவுதமன், விவேகானந்தன் ஆகியோர் பேசினர். கற்றலில் இனிமை கூட்டுவது ஆசிரியர்களே, அலைபேசியே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. விழாவில் பேராசிரியர்கள், தமிழாசிரியர்கள் உட்பட பலர் பேசினர். செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை தலைவர் பழனிசாமி, பொருளாளர் தாமோதரசாமி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.நிகழ்ச்சிகளை சண்முகப்பிரியா, பானுமதி ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினர்.
20 hour(s) ago
20 hour(s) ago
21 hour(s) ago