| ADDED : ஜூன் 12, 2024 01:16 AM
ஊட்டி;ஊட்டி கோரிசோலை சாலை, சீரமைக்கப்படாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கோரிசோலை பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான தடுப்பணை அமைந்துள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து, ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.கடந்து பல ஆண்டுகளாக கோரிசோலை சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றன. தவிர, மக்கள் நடந்து செல்லும் போது, இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையில், சாலையில் போடப்பட்ட தார் மற்றும் ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளன. இதனால் அவசர தேவைக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, நகராட்சி நிர்வாகம், பகுதி மக்கள் நலன் கருதி, சாலையை விரைந்து சீரமைப்பது அவசியம்.