உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்

பைக் திருடன் கைது

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த முத்தையன் மகன் வினோத், 31. இவர் கருமத்தம்பட்டி அடுத்த கணியூரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று, தனது அறைக்கு முன் பைக்கை நிறுத்தி விட்டு, தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, பைக் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், சோமனூர் அருகே போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த நபரை நிறுத்தி ஆவணங்களை கேட்டனர். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், சந்தேகமடைந்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டனர்.அதில், அந்த வாகனம் கணியூரில் திருடப்பட்டது தெரிந்தது. அந்நபர் சூலூர் தென்றல் நகரை சேர்ந்த சின்னத்துரை, 25 என்பது தெரிந்தது. மேலும், 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரிந்தது. இதையடுத்து, சின்னத்துரையை போலீசார் கைது செய்தனர்.

---பெண்ணிடம் செயின் பறித்தவர் ரயிலில் தவறி விழுந்து பலி

அன்னூரில் 49 வயது பெண்ணிடம் இரு இளைஞர்கள், தங்க செயினை பறித்து சென்ற விவகாரத்தில், இளைஞர் ஒருவர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் பெங்களூரு அருகே ரயிலில் தவறி விழுந்து பலியானார்.அன்னூர் ஜீவா நகரை சேர்ந்தவர் தனலட்சுமி, 49. இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 24ம் தேதி, அவரது மளிகை கடை முன் நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், வாகனத்தை நிறுத்தினர். அதில் ஒருவர் மட்டும் கீழே இறங்கினார். மற்றொருவர் வாகனத்திலேயே அமர்ந்திருந்தார்.கீழே இறங்கிய இளைஞர் தனலட்சுமியின் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து, அவரின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் செயினை பறித்தார். பின் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றார்.இதுகுறித்து, தனலட்சுமி அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை ரூரல் எஸ்.பி., பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், தனலட்சுமியிடம் தங்க செயினை பறித்தது, கோவையை சேர்ந்த பிலிப் மேத்யூ, 23, மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேஷ், 23 என தெரிய வந்தது.தனிப்படை போலீசார் நேற்று முன் தினம் காலை குன்னத்தூர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பிலிப் மேத்யூவை கைது செய்தனர்.அவரிடமிருந்து 5 சவரன் தங்கச் செயினை பறிமுதல் செய்தனர். இதனிடையே ராஜேஷை போலீசார் தேடி வந்த நிலையில், ராஜேஷ் பெங்களூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. பெங்களூர் சென்ற போலீசார், அங்கு விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ராஜேஷ் கடந்த 25ம் தேதி பெங்களூரில் இருந்து கோவைக்கு ரயில் ஏறி உள்ளார்.அப்போது ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் பெங்களூர் அருகே அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து அன்னூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலைக்கு முயன்ற 87 வயது மூதாட்டி மீட்பு

கோவை முத்தண்ணன் குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பம்மாள், 87. இவர் நேற்று மாலை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருகே உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு, கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த லைப் காட்ஸ் போலீஸ் குழுவினர், விரைந்து சென்று, மூதாட்டியை காப்பாற்றி முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.பின் மேட்டுப்பாளையம் போலீசார் வந்து, மூதாட்டியை மீட்டு, வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். மூதாட்டி தனக்கு யாரும் இல்லை என சொன்னதால், அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை