உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலவிநாயகா நகரில் வசித்தவர் மருதமுத்து, 41; சென்ட்ரிங் தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் முன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் அண்ணன் மனைவி சித்ரா ஆகிய, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை அறிந்து அங்கு வந்த மருதமுத்துவின் அண்ணன் விஜி, நண்பர் குமரேசன் ஆகியோர் மருதமுத்துவுடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த அண்ணன் விஜி, தன்னிடம் இருந்த கத்தியால் தம்பி மருதமுத்துவை சரமாரியாக குத்தினார். இதில் மருதமுத்து, அதே இடத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக விஜி,45, குமரேசன்,40, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை