உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோவில் திருவிழாவில் பக்தர்கள் பரவசம்

கோவில் திருவிழாவில் பக்தர்கள் பரவசம்

பந்தலுார்;பந்தலுார் அருகே, அத்திக்குன்னா பகுதியில், ஆற்றங்கரையோரம் ஸ்ரீ பெரியாயி, ஸ்ரீ சடையனார், ஸ்ரீ தேவி காட்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.கோவில் திருவிழா கணபதி பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பூஜைகளும் ஆராதனைகளும் நள்ளிரவு, 12:00 மணிக்கு ஸ்ரீ பெரியாயி அம்மன், ஸ்ரீ பாவாடைராயன், ஸ்ரீ தொட்டித்து அம்மன் சின்னான், ஸ்ரீ சங்கிலி கருப்பு, ஸ்ரீ முனி ஆகிய தெய்வங்களுக்கு முப்பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார ஆராதனை பூஜைகள் அன்னதான பூஜையும் நடந்தது. பந்தலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.பூஜைகளுக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் கார்த்திகேயன், தங்கதுரை, சிவா உள்ளிட்ட குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பூஜைகளை பூஜகர் ராதாகிருஷ்ணன், சிவக்குமார் தலைமையிலான குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை