மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
18 hour(s) ago
கோத்தகிரி: கோத்தகிரியில் இருந்து, பழநி முருகன் கோவிலுக்கு, பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.கோத்தகிரி ஒன்னதலை பாதயாத்திரை குழுவினர், ஆண்டுதோறும் பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று, தங்கத் தேர் பூஜையில் பங்கேற்று வழிபாடு நடத்துகின்றனர். நேற்று காலை, 30க்கும் மேற்பட்ட பக்தர்கள், காவடியுடன் புறப்பட்டனர்.முன்னதாக, விநாயகர் மற்றும் ஹெத்தையம்மன் கோவில்களில் சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்களை, பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் வழியனுப்பினர்.மேட்டுப்பாளையம் விநாயகர் கோவிலில், மாலை, 6:00 மணிக்கு அன்னதானத்தில் பங்கேற்ற பக்தர்கள், இரவில் அன்னுார் மண்டபத்தில் தங்கினர். வியாழக்கிழமை இரவு, பழநி அடிவாரம் அடைகின்றனர்.வெள்ளிக்கிழமை மண்டபத்தில் பூஜைகள் நடத்தி, மாலை, 4:00 மணிக்கு, முருகன் கோவிலை சுற்றி கிரிவலம் சென்று, இரவு, 7:00 மணிக்கு மலையேறி, முருகப்பெருமானை வழிபட்டு, தங்க தேர் பூஜையில் பங்கேற்கின்றனர்.
18 hour(s) ago