உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / திருத்தேரில் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் பக்தர்கள் வழிபாடு

திருத்தேரில் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் பக்தர்கள் வழிபாடு

ஊட்டி;ஊட்டியில், திருத்தேரில் வந்த ஸ்ரீ கிருஷ்ண பலராமரை திரளான பக்தர்கள் வழிபட்டனர். ஊட்டியில் ஆண்டுதோறும், 'கோவை இஸ்கான் 'ஹரே கிருஷ்ணா' இயக்கம் சார்பில், ஸ்ரீ கிருஷ்ண பலராமர் தேர் திருவிழா நடக்கிறது. 7வது ஆண்டு தேர் திருவிழா, ஐந்துலாந்தர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் துவங்கியது.தவத்திரு ஜெயபதாக சுவாமி குருமஹராஜ் நல்லாசியுடன், பக்தி வினோத சுவாமி மஹராஜ் முன்னிலையில், தேர் புறப்பாடு நடந்தது. ஊட்டி லோயர் பஜார் சாலை, பஸ் நிலையம், மெயின் பஜார், கமர்சியல் சாலை மற்றும் எட்டின்ஸ் சாலை வழியாக, ஸ்ரீநிவாச பெருமாள் கல்யாண மண்டபத்தை திருத்தேர் வந்தடைந்தது. திருத்தேரில் வந்த ஸ்ரீ கிருஷ்ண பலராமரை, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ