உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூங்காவில் நாய்கள் தொல்லை; சுற்றுலா பயணிகள் அதிருப்தி

பூங்காவில் நாய்கள் தொல்லை; சுற்றுலா பயணிகள் அதிருப்தி

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரியும் நாய்களால் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசன் முடிந்தாலும் வாரநாட்கள், விடுமுறை நாட்களில் கணிசமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்காவிற்குள் உள்ள பூங்கா மாடங்கள், பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, தோட்டக்கலை அலுவலகம், நுழைவு வாயில் பகுதிகளில் மூன்று நாய்கள் சுற்றித்திரிகின்றன. பூங்காவிலேயே சுற்றித்திரிவதால் பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் மலர்களை ரசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற தாவரவியல் பூங்காவில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'பூங்காவில் சுற்றி வரும் நாய்களை வெளியேற்ற பூங்கா நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை