மேலும் செய்திகள்
'அதிகாரி' ஆன டிரைவர்; அடங்காத லஞ்சக் கயவர்!
13-Aug-2024
குன்னுார்:'மிதமிஞ்சிய பொருள் நுகர்வு காரணமாக நாட்டின் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு உலகில் பேரிடர் தொடர்ந்து நடக்கிறது,' என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.குன்னுார் கேத்தி தனியார் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரியில், 'பொறுப்புள்ள குடிமக்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. தலைமையாசிரியர் நெல்த் ரோம் தலைமை வகித்தார்.கருத்தாளராக பங்கேற்ற, லஞ்சம் இல்லா நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் பேசுகையில், ''மிதமிஞ்சிய பொருள் நுகர்வு காரணமாக, நாட்டின் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு உலகில் பேரிடர் தொடர்ந்து நடக்கிறது. இதை கருத்தில் கொண்டு, தேவைகளை குறைத்தல், தேவையற்ற பொருட்களை மறுத்தல், மறுசுழற்சிக்கு உகந்தவற்றை பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் புதிய சிந்தனை வரவேண்டும். எளிய வாழ்க்கை வாழ பள்ளி பருவத்திலேயே பழகவேண்டும். நமதுஉணவு கலாசாரத்தை பின்பற்றுவதால் உடல் நலம் காக்கலாம். தேவைக்கு அதிகமான பொருள் வாங்கி குவிப்பது தவிர்க்க வேண்டும்,'' என்றார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் மேற்பார்வையாளர் நித்யா பேசுகையில், ''பாலியல் வன்கொடுமைகள் நடந்தால், உடனடியாக பெற்றோர் ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்,'' என்றார். பாதுகாப்பு வழிமுறைகள், போக்சோ சட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.உதவி தலைமை ஆசிரியர் வாசு உட்பட பலர் பங்கேற்றனர். மாணவி பூர்ண சந்திரிகா நன்றி கூறினார்.
13-Aug-2024