உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்தீயில் காய்ந்த மூங்கில்கள் எரிந்து சாம்பல்

வனத்தீயில் காய்ந்த மூங்கில்கள் எரிந்து சாம்பல்

கூடலுார்;கூடலுார், மாக்கமூலா அருகே, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வனப்பகுதியில் ஏராளமான காய்ந்த மூங்கில்கள் உள்ளன. கோடை வறட்சியின் தாக்கம் காரணமாக, இப்பகுதியில் அடிக்கடி வனத்தீ ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6:45 மணிக்கு, அப்பகுதியில் மீண்டும் வனத்தீ ஏற்பட்டது. காய்ந்த மூங்கில்களில் தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்த கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் வீரர்கள், அப்பகுதிக்கு சென்று, தண்ணீர் பாய்ச்சி இரவு, 8:15 மணிக்கு தீயை கட்டுப்படுத்தினர்,எனினும், வனத்தீயில் ஏராளமான மூங்கில், எரிந்து சாம்பலாகியது. மழை வந்தால் மட்டுமே இப்பகுதியில் ஏற்படும் வனத்தீ பாதிப்புக்கு தீர்வு கிடைக்கும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ