உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாலக்காடு மாவட்டத்தில் வறட்சி ரூ.32.46 கோடி பயிர் சேதம்

பாலக்காடு மாவட்டத்தில் வறட்சி ரூ.32.46 கோடி பயிர் சேதம்

பாலக்காடு:கடும் வெயில், வறட்சி காரணமாக, பாலக்காடு மாவட்டத்தில், 32.46 கோடி ரூபாய் மதிப்பில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக, ஆய்வு குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.கேரள மாநிலத்தில், வெயில், வறட்சி தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட தலைமை வேளாண் துறை அதிகாரி, வேளாண் உதவி இயக்குநர், மாநில வேளாண் மைய விஞ்ஞானிகள், வேளாண் அலுவலர், உதவியாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அக்குழு ஆய்வு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்து உள்ளது.ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பது:பாலக்காடு மாவட்டத்தில், 3,234 ஹெக்டேர் பாசன பரப்பு வெயிலால் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதத்தால், 4,049 விவசாயிகள் பாதித்துள்ளனர். மழையின்மை, வறட்சி, கடும் வெயில் நிலவுவதால், பாலக்காடு மாவட்டத்தை வறட்சி பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும்.வறட்சியால், நெல் விவசாயம் அதிகம் பாதித்தது. 1,049 ஹெக்டேர் நிலத்தில் உள்ள நெல் சாகுபடி பாதித்தது.723 ஹெக்டேர் வாழை, 302 ஹெக்டேர் மிளகு, 42 ஹெக்டேர் ஜாதிக்காய், 20 ஹெக்டேர் காய்கறி பயிர்கள் வறட்சியால் பாதித்துள்ளன.பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர் சாகுபடியே மேற்கொள்ளவில்லை. இதற்கு முன், வற்றாமல் இருந்த குளங்கள் மற்றும் ஓடைகள் கூட, தற்போது வறண்டுள்ளன.பாலக்காடு மாவட்டத்தில், 32.46 கோடி ரூபாய் மதிப்பில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ