மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி;ஊட்டி தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமை வகித்தார். ஊட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மாரியம்மன் பங்கேற்று போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.மேலும், 'லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்,' என, அறிவுறுத்தினார்.தலைமை காவலர் சுமதி உட்பட, மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். பட்டதாரி ஆசிரியர் பீமன் நன்றி கூறினர்.
03-Oct-2025