மேலும் செய்திகள்
20 கிலோ கஞ்சாவுடன் பாலக்காட்டில் மூவர் கைது
22-Feb-2025
பாலக்காடு, ; பாலக்காடு அருகே, பட்டாம்பியில் போதை மாத்திரைகளுடன் இருந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, ஷொர்ணூர் டி.எஸ்.பி., மனோஜ்குமார், பட்டாம்பி இன்ஸ்பெக்டர் பத்மராஜன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு பட்டாம்பி அருகே பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றனர்.அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு நின்றிருந்த நபரை சோதனை செய்த போது, 21.50 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ., என்றழைக்கப்படும் போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடித்தனர்.இதையடுத்து நடத்திய விசாரணையில், அவர், பட்டாம்பி ஓங்கல்லூர் பகுதியைச் சேர்ந்த முஸ்தபா, 56, என்பது தெரிந்தது. கைது செய்த முஸ்தபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.அதேபோல், மண்ணார்க்காடு டி.எஸ்.பி., சுந்தரன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார், காஞ்சிரப்புழா பொட்டச்சேரி பகுதியில் சாதிக், 38, என்பவரின் வீட்டை சோதனை செய்ததில், 30 கிராம் எடை கொண்ட 'மெத்தபட்டாமின்' என்றழைக்கப்படும் போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடித்தனர். இதையடுத்து, சாதிக்கை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
22-Feb-2025