மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்
20-Dec-2025
பந்தலுார்:பந்தலுார் அருகே நெலக்கோட்டை மற்றும் சூசன் பாடி பகுதிகள், -சுல்தான் பத்தேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. இதன் கீழ் பகுதியில் முதுமலை புலிகள் காப்பக எல்லை பகுதி அமைந்துள்ள நிலையில், அங்கிருந்து தேயிலை தோட்டங்களுக்கு வெளியேறும் யானைகள், கிராமங்களுக்குள் வந்து முகாமிடுகின்றன. அதில், விலங்கூர் என்ற இடத்தில் முகாமிட்டு வரும் ஒற்றை யானை, அவ்வப்போது நெலாக்கோட்டை சாலையில் உலா வருவதுடன், இப்பகுதி குடியிருப்பு பகுதியில் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த யானை திடீரென பஜார் பகுதியில் வந்ததால் பாதசாரிகள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும், வீட்டிற்கு வெளியே நின்று இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பதுங்கினர். பகல் நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி சாலையில், உலா வரும் யானைகளால் கிராம மக்களும் வாகன ஓட்டுனர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எந்த நேரத்தில் யானைகள் தாக்கும் என்ற அச்சத்தில் பணியாற்றும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால், இப்பகுதிகளில் பிதர்காடு வனத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025