மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்
20-Dec-2025
மேட்டுப்பாளையம் : காரமடை நகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் மின் மயானத்தில் ஆம்புலன்ஸ்க்கு எப்.சி.,(தகுதிசான்று) இன்சூரன்ஸ் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால், இறந்தவர்கள் உடலை அதிக கட்டணம் செலுத்தி தனியார் ஆம்புலன்ஸ்களில் கொண்டு வர வேண்டியுள்ளது. ஏழை, எளிய மக்கள் கடும் அவதியடைகின்றனர்.காரமடை மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் உயிரிழப்போரின் உடல்கள் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்படுகின்றன. இதற்கு கட்டணமாக ரூ.2,250ம், ஆம்புலன்ஸ் கட்டணம் நகர் பகுதியில் ரூ.750ம், பிற பகுதிகளில் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணம், காரமடை நகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது. இந்த மின் மயானத்தில் உள்ள ஆம்புலன்ஸ் சில மாதங்களாக இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எப்.சி., இன்சூரன்ஸ் புதுபிக்கப்படவில்லை என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனால், உடல்களை எடுத்து வர தனியார் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு, ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் ஏழை, எளிய மக்கள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து காரமடை நகராட்சி பா.ஜ., கவுன்சிலர் விக்னேஷ் கூறியதாவது:காரமடை நகராட்சி சார்பில் செயல்படும் மின் மயானத்தில் உள்ள ஆம்புலன்ஸ் கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் நின்று கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டும் இதுபோல் மூன்று மாதங்கள் செயல்படாமல் நின்று கொண்டு இருந்தது. இது தொடர் கதையாகி வருகிறது. இதனால் காரமடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, மின் மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு வந்து சேர்க்க, தனியார் ஆம்புலன்ஸ்களை நாட வேண்டி உள்ளது. இது மக்களுக்கு அதிக செலவை ஏற்படுத்துகிறது. இதில், நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.காரமடை நகராட்சி கமிஷனர் மனோகரன் கூறுகையில், ''ஆம்புலன்ஸ் ஆர்.சி. புத்தகத்தில் திருத்தம் இருந்தது. அது சரி செய்யப்பட்டு விட்டது. விரைவில் எப்.சி., காண்பிக்கப்படும், இன்சூரன்ஸ் போடப்படும். மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வாரத்தில் இயக்கப்படும்,'' என்றார்.-----
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025