உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியின மக்களின் பொருளாதார கணக்கெடுப்பு பணி ஆய்வு

பழங்குடியின மக்களின் பொருளாதார கணக்கெடுப்பு பணி ஆய்வு

ஊட்டி : ஊட்டி உல்லத்தி ஊராட்சி முத்தநாடு மந்து பகுதியில், பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.அப்போது, அவர் பேசியதாவது:பழங்குடியின மக்களின் பொருளாதார கணக்கெடுப்பு பணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சென்னை சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.இதில், பழங்குடியினரின் மக்கள் தொகை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, நில வகை பயன்பாடு, நில குத்தகை, நல்வாழ்வு சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் வன உரிமைச் சட்டம், 2006 குறித்த விழிப்புணர்வு போன்ற விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில், 416 குடியிருப்புகளில் இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்டத்தில், 129 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, நான்கு வட்டாரங்களில் நடக்கிறது. இவ்வாறு, கலெக்டர் பேசினார்.வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயக்குமார், தாசில்தார் சரவணவகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை