உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பில்லாத மருந்து கிடங்கு பயனுள்ளதாக மாற்ற வலியுறுத்தல்

பராமரிப்பில்லாத மருந்து கிடங்கு பயனுள்ளதாக மாற்ற வலியுறுத்தல்

குன்னுார்;குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டில் பராமரிப்பின்றி உள்ள கால்நடை துறையின் மருந்து கிடங்கை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சி மூன்றாவது வார்டு பகுதியில் கால்நடை துறைக்கு சொந்தமான மருந்து கிடங்கு உள்ளது. இதன் அருகில் உள்ள கால்நடைத்துறை கட்டடத்தை சீரமைக்கப்பட்ட பின், இந்த மருந்து கிடங்கு பயன்படுத்தாமல் விடப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ள இந்த கிடங்கு சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி வருகிறது.சமூக ஆர்வலர் முபாரக் கூறுகையில்,''இந்த மருந்து கிடங்கு கடந்த, 28 ஆண்டுகளுக்கும் மேலாக பயனில்லாமல் கிடக்கிறது. இந்த பகுதிகளில் தேர்தல் பூத் இல்லாததால் தேர்தல் பூத் அமைத்து.இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ