உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள்

லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள்

ஊட்டி;லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிகளில், காவல் துறையோடு இணைந்து செயல்பட, முன்னாள் படை வீரர்கள், சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பம் உள்ள, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த, 65 வயதுக்கு உட்பட்ட, முன்னாள் படை வீரர்கள், ஆதார் அட்டை, முன்னாள் படை வீரர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் படைப்பணி சான்றுடன் தங்களது விருப்பத்தை, ஊட்டி கூட்ஷெட் சாலையில் அமைந் துள்ள, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவ இயக்குனர் அலுவலகத்தில், நேரில் பதிவு செய்து கொள்ளலாம்.இல்லாத பட்சத்தில்,'0423-2444078 என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தினை தெரி விக்கலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ