| ADDED : ஜூன் 29, 2024 02:05 AM
ஊட்டி;ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மலைவாழ் மக்கள் கூட்டுறவு கொள்முதல் மற்றும் விற்பனை மேம்பாட்டு இணையம் சார்பில் விற்பனை கண்காட்சி நடந்தது. இந்திய பழங்குடியினர் நல அமைச்சகம் சார்பில், 'ஆதி பஜார் மற்றும் ஆதி சித்ரா' என்ற விற்பனை கண்காட்சியில், முழுக்க பழங்குடியினர் மக்கள் தயாரித்த பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி நடந்தது.அதில், பழங்குடியினர் தயாரித்த துணி வகைகள், ஆபரணங்கள், பரிசு பொருட்கள், பழங்குடியினர் பெயிண்டிங், இயற்கை பொருட்கள், உலோக கலைநயமிக்க பொருட்கள் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட கலைநயமிக்க பொம்மைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில், தமிழ்நாடு உட்பட, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பழங்குடியின மக்கள் பங்கேற்றனர். இக்கண்காட்சி, வரும் 3ம் தேதி வரை, காலை, 10:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கிறது. முதல் நாளில், ஏராளமானோர் பொருட்களை வாங்கி சென்றனர்.