மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பந்தலுார்:நீலகிரியில் தேயிலையில் பரவும் கொப்புள நோயால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சார்ந்த தொழில் பொருளாதாரத்தின் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதில், தற்போது பசுந்தேயிலைக்கு போதிய விலை கிடைக்காதது, இடுபொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், மாறி வரும் காலநிலையால், தற்போது கொப்புள நோய் பரவிவருவதால், தேயிலை விவசாயிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேயிலையில், 507 வகையான பூஞ்சான நோய்கள் கண்டறியப்பட்டுள்ளது. வேர், தண்டு, இலை பகுதிகளை தாக்கும், 15 வகையான பூஞ்சான நோய்களால் தேயிலை விவசாயம் பாதிக்கப்படுகிறது. அதில், 'எக்ஸோபெசிடியம் வெக்ஸ்சன்ஸ்' எனப்படும், கொப்புள நோய் பூஞ்சானம் தாக்குதலால், 50 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.குறிப்பாக, பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதி தேயிலை தோட்டங்களில், தற்போது கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக, தேயிலை செடிகளின் மேல் பகுதி கருகி வருவதுடன், மகசூல் குறைந்து தேயிலை விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மழவன்சேரம்பாடியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் கூறுகையில், ''ஏற்கனவே தேயிலைக்கு போதிய விலை, கிடைக்காததால் தேயிலை விவசாயத்தை விட்டு விடலாம் என்ற எண்ணத்தில் விவசாயிகள் உள்ளனர். தற்போது, நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது,'' என்றார்.தேயிலை விவசாய பயிற்சியாளர் அன்பரசன் கூறுகையில், ''சூரிய ஒளி குறைவு, மேக மூட்டத்தில், 60 முதல் 100 சதவீதம் வரை காற்றின் ஈரப்பதம் உள்ள போதும், இலை பரப்பில் தொடர்ந்து, 12 மணி நேரத்திற்கு மேல் ஈரப்பதம் இருந்தாலும், கொப்புள நோய் பரவும். தோட்டங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றி வெயில் படும் வகையில், பரவ செய்தால் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்,'' என்றார்.
03-Oct-2025