மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலுார்:'கூடலுார் உழவர் சந்தையில், பழுதடைந்துள்ள மினி குளிர்சாதன கிடங்கை சீரமைத்து தர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் ஒட்டி, உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக, விவசாயிகள் வாடிக்கையாளர்கள் இன்றி பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு கிடந்தது. அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் முயற்சியினால், உழவர் சந்தை செயல்பாட்டில் உள்ளது.உழவர் சந்தையில் காய்கறிகளை வைத்து பாதுகாக்க வசதியாக, குளிர்சாதன கிடங்கு ஏற்படுத்தித் தர வலியுறுத்தினர். அதனை ஏற்று கடந்த ஆண்டு, சோலார் மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய மினி குளிர்சாதன கிடங்கு அமைத்தனர். அதில் வியாபாரிகள் காய்கறிகளை வைத்து பாதுகாத்து வந்தனர்.இவை சமீபத்தில் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், அழுக கூடிய காய்கறிகளை பாதுகாப்பாக வைக்க முடியாமல் வியாபாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பழுதடைந்த, மினி குளிர்சாதன கிடங்கை சீரமைத்தால் பயனாக இருக்கும்.
03-Oct-2025