மேலும் செய்திகள்
புல்வெளியில் ஏற்பட்ட வனத் தீ பரவாமல் தடுப்பு
13-Feb-2025
கூடலுார்; முதுமலையில் வனத்தீ ஏற்படுவதை தடுக்க, மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம், வனத்துறையினர் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் நடப்பாண்டு வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. உணவு, குடிநீருக்காக வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. இதனை தடுக்க வறட்சியான பகுதிகளில், வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய வனத்துறையினர் வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று, சுழற்சி முறையில் சிமென்ட் தொட்டிகளில் ஊற்றி வருகின்றனர்.மேலும், வறட்சியில் வனத்தீ ஏற்படுவதை தடுக்க, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதில், மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிப்பவர்கள் மூலம் வனத்தீ ஏற்படுவதை தடுக்க சாலையோரம், செயற்கை தீ ஏற்படுத்தி, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் பழங்குடியினர் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும், சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களால் வனத் தீ ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க சாலையோரம், செயற்கை தீ மூலம் தீ தடுப்பு கோடுகள் அமைத்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். வனப்பகுதியில், தீ ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றனர்.
13-Feb-2025