மேலும் செய்திகள்
குறிஞ்சி மலையில் வனத்தீ 4 ஏக்கர் வன வளம் சேதம்
06-Feb-2025
குன்னுார், ; குன்னுார் பாய்ஸ்கம்பெனி அருகே குப்பைக்கு வைத்த தீ பரவியதால் தீயணைப்பு துறையினர், இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே வனத்தீ ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தேயிலை தோட்டங்களில் காய்ந்த சருகுகள் மற்றும் குப்பைகளுக்கு தீ வைப்பதால் வனத்தீ பரவி, பல ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை பாய்ஸ் கம்பெனி பகுதியில் குப்பைக்கு வைத்த தீ அருகில் உள்ள வனப்பகுதியில் பரவியது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில், தீயணைப்பு வீரர்கள், பகல், 12:30 மணியிலிருந்து மாலை, 3:00 மணி வரை, இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீ அணைக்கும் போது பல இடங்களிலும் கடும் புகை நிலவியதால், மிகவும் சிரமத்துடன் வனத்தீ பரவுவதை தடுத்தனர். இதனால் ஒரு ஏக்கர் பரப்பளவிலான செடிகள் புதர்கள் எரிந்து சேதமானது. தீயணைப்பு அலுவலர் கூறுகையில், 'கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதித்து வருவதால், வனப்பகுதி, குப்பை இவற்றுக்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும்,' என்றார்.
06-Feb-2025