உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / செப்டிக் டேங்கில் விழுந்த ஆடு தீயணைப்பு வீரர்கள் மீட்பு

செப்டிக் டேங்கில் விழுந்த ஆடு தீயணைப்பு வீரர்கள் மீட்பு

குன்னுார்:குன்னுார் காவலர் குடியிருப்பு பகுதியில் செப்டிக் டேங்கில் விழுந்த ஆடு தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது.குன்னுார் டென்ட்ஹில் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு செப்டிக் டேங்கில் ஆடு ஒன்று விழுந்துள்ளது. உடன் வந்த மற்ற ஆடுகள் அங்கு சப்தமிட்டு சென்று வந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில் முன்னணி தீயணைப்பு வீரர்கள் முரளி, சுப்ரமணி தலைமையில் பிற வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி ஆட்டை உயிருடன் மீட்டனர். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி