உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விவசாய தோட்டத்தை சூழ்ந்த வெள்ளத்தால் பாதிப்பு

விவசாய தோட்டத்தை சூழ்ந்த வெள்ளத்தால் பாதிப்பு

கூடலுார் : கூடலுாார் தேவாலா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த மழை பெய்தது. நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்தது. பல இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதில், கூடலுார் பாடந்துறை ஆலவயல் சாலை மற்றும் அதனை ஒட்டிய விவசாய நிலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், போக்குவரத்து பதிக்கப்பட்டு வாகனங்கள் செல்லவும் மக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்பட்டது. இரவு, 11:30 மணிக்கு மழை வெள்ளம் வடிந்தது. மக்கள் நிம்மதி அடைந்தனர். நேற்று காலை, 8:00 மணி வரை அதிகபட்சமாக தேவாலாவில், 126 மி.மீ; கூடலுாரில், 65 மி.மீ; பாடந்துறையில்ல 50 மி.மீ; ஓவேலி 42 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.மக்கள் கூறுகையில்,'சாதாரண மழையின் போது பாடந்துறை -ஆழவயல் சாலை மற்றும் அதனை ஒட்டிய விவசாய நிலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து கொள்வதால் மக்கள் சிரமத்துக்கு அளாகின்றனர். எனவே, அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து மழைநீர் சாலையில் தேங்காமல் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ