உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் மலர் கண்காட்சி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஊட்டியில் மலர் கண்காட்சி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஊட்டி, : ஊட்டியில் கோடை சீசன் துவங்கியதால் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்து உள்ளது. நாளை, 10ம் தேதி துவங்கும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி இம்மாதம், 20ம் தேதி வரை நடக்கிறது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க அரசு தாவரவியல் பூங்காவில், 270 ரகங்களில், 10 லட்சம் மலர்கள் தயார்படுத்தியுள்ளனர். அதேபோல் ரோஜா பூங்காவில், 4,000 வகைகளில், 40 ஆயிரம் ரோஜாக்கள் பூத்து குலுங்குகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த ஒரு வாரமாக சராசரியாக, 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், ஊட்டியில் துவங்கும், 126 வது மலர் கண்காட்சியை முன்னிட்டு, 10ம் தேதி மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி